Friday, 4 March 2016

பிச்சைக்காரன் விமர்சனம்

#Pichaikkaran Movie Review ..
தமிழ் சினிமா திறமையை விட மூடநம்பிக்கை யை அதிகம் நம்பும்.. அதில் காணாமல் போனவர்கள் பலபேர்..
இது நபர்களுக்கு மட்டும் அல்ல படத்தின் தலைப்புக்கும் தான்..
முருகதாஸ் உட்பட பலபேர் கூறியும் படத்தின் தலைப்பை மாற்றாது மூடநம்பிக்கை க்கு முற்றுபுள்ளி வைத்த இயக்குனர் சசி க்கு பெரிய Salute ..
கோவையில் பெரிய தொழிலதிபரின் மகன் வி. ஆண்டனி, இவர் சில காரணங்களுக்காக பிச்சைக்காரனாக வேஷம் போடுகிறார், அது ஏன்.. அவரது நோக்கம் நிறைவேரியதா என்பதே கதை..
பெற்றோர்களின் காலில் விழும் படியான காட்சிகள் கூட இருக்ககூடாது என்று நினைக்கும் நடிகர்கள் மத்தியில், வி. ஆண்டனி எப்படி இந்த கதாபாத்திரத்தில் நடிக்க சம்மதித்தார் என்று தெரியவில்லை..
நான் லிருந்தே இவரது நடிப்பை வியந்து பார்த்துக்கொண்டு இருக்கிறேன்.. கமல், விக்ரம், பிருத்விராஜ், அருள்நிதி, விஜய்சேதுபதி, சூர்யா போன்ற நடிகர்கள் தான் கதாபாத்திரத்துடன் ஒன்றி நடிப்பார்கள்..  அந்த வரிசையில் விஜய் ஆண்டனி யும் இணைந்துள்ளார்..
Pizza கடை நடத்துபவராக சாட்னா டைடஸ், இந்த வருடம் தமிழ் சினிமாவிற்க்கு நடிக்க தெரிந்த நடிகைகள் கிடைத்ததில் இவர் மூன்றாவது நபர்.. விஆ வை காதலிப்பது பின் அவர் பிச்சைக்காரன் என்று தெரிந்த பின் அவரை மறக்கமுடியாமல் வருந்துவது என இவரது நடிப்பு அருமை..
Technical ஆக படத்தில் சிறு குறை கூட இல்லை..
Prasanna வின் ஒளிப்பதிவு, senthil ன் editing, Art work, சண்டை காட்சிகள் என அனைத்துமே படத்தின் பெரிய பலம்..
நீண்ட நாட்களுக்கு பிறகு அனைத்து வசனங்களுக்கும் ரசிகர்கள் கைதட்டுவதை கவனிக்கமுடிந்தது.. வசனங்களை கேட்க்கவே ஒரு முறை திரையரங்கு சென்றுவரலாம்..
காதல் காட்சி, Sentiment காட்சி, சண்டை காட்சி என அனைத்திலும் விஜய் ஆண்டனி யின் பின்னணி இசை Top class.. pre climax ல் வரும் Transformation காட்சியில் இவரது BGS மெய்சிலிர்க்க வைத்தது.. நெஞ்சோரத்தில் பாடல் இவரின் Class..
சசி யின் படங்கள், சொல்லாமலே யில் இருந்து 555 வை வரைக்கும் அனைத்திலுமே அழுத்தமான கதையும், கதாபாத்திரங்களும் இருக்கும்.. அது இந்த படத்தில் 200 •/• இருந்தது..
குடுத்த 100 ரூபாய்க்கு கூட படம் காட்டாத இயக்குனர்கள் மத்தியில்.. 100 ரூபாய் வாங்கி கொண்டு 1000 ரூபாய் க்கு Worth ஆன படத்தை காட்டியுள்ளார் சசி..
தலைப்பே பிச்சைக்காரன்., வாங்கி வெளியிட்ட திரையரங்கு உரிமையாளர் மற்றும் தயாரித்த பாத்திமா விஜய் ஆண்டனியை பணக்காரன் ஆக்கப்போகிறது..
குடும்பத்துடன் ஒவ்வொருவரும் பார்க்கவேண்டிய படம்..
இந்த படம் நிச்சயம் உங்களை சிந்திக்க வைக்கும், சிறிக்க வைக்கும், அழ வைக்கும்.. நிச்சயம் ஒரு மாற்றத்தை ஏற்படுத்தும்..
Verdict - 4.75/5, This Pichaikkaran will stands as a Unavoidable person in our Heart for sure..
-CinemaBuzz

4 comments:

  1. This comment has been removed by the author.

    ReplyDelete
  2. nice but hw can u give 4.75

    ReplyDelete
  3. flaws for this film.. error 404 found..

    ReplyDelete
  4. if there is no flaws means u can give 4.75 do u the rating value of 4.75

    ReplyDelete